அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 6,9-ம் வகுப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு

உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி

Update: 2017-01-15 19:45 GMT
உடுமலை,

ராணுவ பயிற்சி பள்ளி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ளது அமராவதி நகர் சைனிக் பள்ளி (ராணுவ பயிற்சி பள்ளி). மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளி தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு சைனிக் பள்ளியாகும்.

இந்த பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் தமிழ்நாடு மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதன்படி 2017-2018-ம் கல்வி ஆண்டிற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

1,334 மாணவர்கள் எழுதினர்

சைனிக் பள்ளி மற்றும் புதுச்சேரி வள்ளலார் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் 6-ம் வகுப்பிற்கான நுழைவுத்தேர்வும், புதுச்சேரி வள்ளலார் பள்ளி, உடுமலை போடிபட்டியில் உள்ள லூர்து மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் 9-ம் வகுப்பிற்கான நுழைவுத்தேர்வும் நடந்தது.

இந்த தேர்வு மையங்களில் 6-ம் வகுப்பில் சேர்வதற்கு மொத்தம் 881 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர்வதற்கு 453 மாணவர்களும் என மொத்தம் 1,334 மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதினர். இந்த தகவலை அமராவதிநகர் சைனிக் பள்ளி முதல்வர் குரூப் கேப்டன் டி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்