திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அதிக வரி வசூல்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்,
வரிவசூல் வேகம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களிடம் இருந்து பெறப்படும் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் ஆகியன ஊராட்சிகளின் பிரதான வருவாயாக இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் தொகை மற்றும் திட்ட பணிகள் மூலம் கிடைக்கும் தொகைகள் மூலம் பணிகள் நேரடியாக நடக்கின்றன.
அந்த வகையில் மாவட்டத்திற்கு சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூல் மட்டும் வருவாய் ஆதாரமாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் வரி வசூல் பணிகள் முன்பு இருந்ததை காட்டிலும் வேகமாக நடைபெற்று வருவதே இதற்கு காரணமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் வீட்டு வரியாக ரூ.5 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரமும், தொழில் நிறுவனங்களுக்கான சொத்து வரியாக ரூ.2 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரமும், தொழில் வரியாக ரூ.1 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான வரியாக ரூ.48.93 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர்கள் பதவியில் இல்லாததால் திட்ட பணிகள் மட்டும் ஊராட்சிகளில் நடந்து வருகின்றன. வேறு முக்கியமான பணி இல்லாததால் வரிவசூலை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு இரண்டரை மாதம் உள்ள நிலையில் வரிவசூல் 95 சதவீதத்துக்கும் அதிகமாக முடிந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
எதிர்பார்த்த வரிவசூல்
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளின் வீட்டு வரியாக ரூ.4 கோடியே 90 லட்சத்து 29 ஆயிரம் அளவுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான சொத்து வரியில் ரூ.2.21 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.86.14 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சுயநிதி கல்வி நிறுவனங் களுக்கான வரி ரூ.41.23 லட்சம் வசூலாகி உள்ளது. சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண வசூல் எதிர்பார்த்த அளவு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.