சிவகங்கை அருகே கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி

சிவகங்கை அருகே திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்

Update: 2017-01-15 23:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை அருகே திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிவகங்கை அருகே உள்ள பனங்காடியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கருணாஸ் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கு ஏராளமான இளைஞர்கள் தங்களது காளைகளுடன் அங்கு திரண்டனர். இதனையடுத்து போலீசார், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஜல்லிக்கட்டு நடத்த தடையுள்ளது என்றும், எனவே ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்றும் தெரிவித்து அதற்கான உத்தரவையும் கொடுத்தனர். இந்த நிலையில் அங்கு காளைகளுடன் வந்த சிலரை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் காளைகளுடன் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த கருணாஸ் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அத்துடன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி தாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான ஏ.களாப்பூர், எம்.சூரக்குடி, முறையூர் ஆகிய பகுதிகளில் நேற்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது.

மேலும் செய்திகள்