ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என ஆரணியில் காளை மாடு உடன் ஆர்ப்பாட்டம்

ஆரணி 5–வது வார்டு இளைஞர் அமைப்பினர் மத்திய அரசு தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்

Update: 2017-01-15 22:45 GMT

 

ஆரணி,

ஆரணி 5–வது வார்டு இளைஞர் அமைப்பினர் மத்திய அரசு தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் அறிவிக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அமைப்பு தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காளை மாடு உடன் இளைஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பி, கையில் பதாகைகள் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே போல் ஆரணி அருகே தச்சூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் 14–ந்தேதி ஆர்ப்பாட்டமும், நேற்று 15–ந்தேதி இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்திட நீதிமன்றம் உத்தரவு வழங்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்