இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நல்ல விழா ரங்கசாமி பொங்கல் வாழ்த்து

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் திருநாளாக பொங்கல் திருநாளை பல்வேறு சிறப்புகளுடன் நாம் கொண்டாடி வருகிறோம்.

Update: 2017-01-13 22:00 GMT

புதுச்சேரி

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் திருநாளாக பொங்கல் திருநாளை பல்வேறு சிறப்புகளுடன் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாள் மனிதர்களுக்கு மட்டுமின்றி இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறிடும் நல்ல விழாவாக உள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றவும், அனைத்து வளங்களும், நலன்களும் இந்த தை திருநாளில் தமிழர்களின் இல்லத்தில் பெருகட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுபோல் இந்த பொங்கல் திருநாளில் பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு அனைவரும் புதிய எண்ணங்களுடன் இந்த பொங்கல் திருநாளை வரவேற்போம்.

தரணிபோற்றும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு எங்களது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பிலும், எனது சார்பிலும் புதுச்சேரி பெருமக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்