மத்திய, தமிழக அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்காத மத்திய, தமிழக அரசுகளை கண்டித்து புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் சீத்தா.வேதநாயகம், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் நிர்வாகிகள் மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன், சக்திவேல், வேன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாநிலம்வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் பலராமன், துணை அமைப்பாளர் குமார் என்ற கிருஷ்ணன், நிர்வாகிகள் ஆறுமுகம், லோகையன், கோகுர், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை தெற்கு மாநில தி.மு.க., மற்றும் வடக்கு மாநில தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.