மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

Update: 2017-01-13 22:30 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பெரியண்ணன்அரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் மெய்யநாதன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் நைனாமுகமது உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இலுப்பூர் அருகே ராப்பூசல் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இந்த நிலையில் ராப்பூசல் கிராமத்தில் உள்ள வாடிவாசல் முன்பு இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் காளை மாட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் மணமேல்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்காத மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்