குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள எட்டியத்தளி கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள எட்டியத்தளி கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, காலி குடங்களுடன் நேற்று முன்தினம் அறந்தாங்கி இருந்து பேராவூரணிக்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி சப்–இன்ஸ்பெக்டர் கோபிநாத், தாசில்தார் பரணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் அந்த பகுதியல் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் பதவி ஏற்பு
புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழா கண்ட நகராட்சி ஆகும். புதுக்கோட்டை நகராட்சியின் ஆணையராக ராஜாராம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பணி மாறுதல் ஆகி தேனி நகராட்சிக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தேனி நகராட்சி ஆணையராக இருந்த சுப்பிரமணியன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பதவி ஏற்று உள்ளார். இவர் முன்பு புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து தேனி நகராட்சிக்கு மாறுதல் ஆகி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கிழிப்பு
புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டி கடைவீதி மற்றும் தோப்புக்கொல்லை ஆகிய பகுதிகளில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் மேட்டுப்பட்டி கடைவீதியில், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்டிருந்த 2 பதாகைகளை கிழித்து உள்ளனர். இதேபோல் தோப்புக்கொல்லை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு பதாகையையும் மர்ம நபர்கள் கிழித்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேட்டுப்பட்டியில் உள்ள தீபா ஆதரவு பதாகையை கிழிக்கும் மர்ம நபர்களை பிடிக்க மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த தீபா ஆதரவாளர்கள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.