உடுமலையில் சாலைப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊதிய பலன்கள் மற்றும் இதர பணப்பலன்களை உரிய காலத்தில் வழங்காமல் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து உடுமலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-01-13 21:30 GMT
உடுமலை,

நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களின் ஊதிய பலன்கள் மற்றும் இதர பணப்பலன்களை உரிய காலத்தில் வழங்காமல் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து உடுமலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அந்த அலுவலக வளாகத்திற்குள் சமையல் செய்து சாப்பிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்