குடவாசல் அருகே தனியார் குடிநீர் நிறுவனத்தை மூடக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்

குடவாசல் அருகே தனியார் குடிநீர் நிறுவனத்தை உடனே மூடக்கோரி கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-13 22:30 GMT

குடவாசல்,

சாலைமறியல்

குடவாசல் அருகே உள்ள தலையாலங்காடு கிராமத்தில் தனியார் குடிநீர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மிகப்பெரிய போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து பாட்டில், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தனியார் குடிநீர் நிறுவனத்தை மூடக்கோரி தலையாலங்காடு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும், உதவி கலெக்டர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் குடிநீர் நிறுவன உரிமையாளர் திருமுருகன் உறுதி அளித்தார். இதற்கிடையே உதவி கலெக்டர் விசாரணை இல்லாத நிலையில் குடிநீர் நிறுவன உரிமையாளர் லாரிகளில் தண்ணீர் ஏற்றி செல்வதை பொதுமக்கள் கண்டித்து, இப்பகுதியில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை, குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல் அலைகிறோம். இந்த குடிநீர் நிறுவனத்தில் இருந்து தண்ணீர் எடுத்து செல்ல கூடாது எனவும், தனியார் குடிநீர் நிறுவனத்தை மூடக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மயிலையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கெரக்கொரியா ஆகியோர் தலைமையில், தனியார் குடிநீர் நிறுவனம் முன்பு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்தானமேரி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அதன் உரிமையாளர் திருமுருகனிடம் கண்டிப்பாக உதவி கலெக்டர் விசாரணைக்கு பிறகு தான் போர்வெலில் தண்ணீர் எடுக்க வேண்டும் என்றும், தண்ணீர் பிடித்துள்ள லாரிகள் வெளியே செல்ல கூடாது என்றும் கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்