திருவள்ளுவர் தினத்தையொட்டி நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு
திருவள்ளுவர் தினத்தையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை,

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் தமிழ்நாடு மதுபான விதிகளின்படி திருவள்ளுவர் தினத்தையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் தமிழ்நாடு வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்களை மூட வேண்டும். மேலும் கிளப்புடன் இணைந்த மதுபான உரிமங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உள்ள உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடுவதற்கு ஆணையிடப்பட்டு உள்ளது.
எனவே நெல்லை மாவட்டத்தில் மதுக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். இந்த நாளில் சட்ட விரோதமாக எந்த இடத்திலும் மதுபானங்கள் விற்பனை, மதுபானங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் போலீஸ் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறிஉள்ளார்.