சாத்தூர் ஓட்டலில் தொழில் அதிபர் கொலை

சாத்தூர் ஓட்டலில் தொழில் அதிபர் கொலை

Update: 2017-01-13 23:00 GMT

சாத்தூர்,

ஓட்டலில் கொலை விருதுநகர் அருகேயுள்ள தென்னமநல்லூரில் வசித்து வந்த தொழில் அதிபரும் வாரப்பத்திரிகையின் பகுதி நேர நிருபருமான கார்த்திகை செல்வன் கடந்த 9–ந் தேதி மாலை கொலை செய்யப்பட்டார். அவர் பங்குதாரராக உள்ள சாத்தூரில் உள்ள ஓட்டலில் இருந்த போது அங்கு வந்த கும்பல் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. கார்த்திகை செல்வன் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மதுரை கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் மதுரை கோர்ட்டில் மதுரையை சேர்ந்த 4 பேரும் சிவகாசியை சேர்ந்த 2 பேரும் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவரும் சரண் அடைந்தனர்.

இதற்கிடையே மதுரை மையிட்டான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன்(45),வாடிப்பட்டி அருகிலுள்ள மெட்டுமீராத்தான்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஆதிநாராயணன் முக்கிய குற்றவாளியாவார். கார்த்திகை செல்வனும் ஆதிநாராயணனும் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆனால் இருவருக்கும் பகை வளர்ந்து வந்து இருக்கிறது. இதனால் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கோர்ட்டில் ஆஜர்

கைது செய்யப்பட்ட இருவரும் சாத்தூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்