ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காததால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காததால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வேலூரில் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-01-13 23:30 GMT

வேலூர்,

ஜல்லிக்கட்டுக்கு தடை

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தி..மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஈஸ்வரப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் முகமதிசகி உள்பட தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

மேலும் சிலர் காளை மாடுகளுடன் கலந்துகொண்டனர். அதில் ஒருமாடு கூட்டத்திற்குள் புகுந்து ஓடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்