வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-12 22:21 GMT

கும்பகோணம்,

ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் பக்தபுரிதெரு, அரசு கல்லூரி ரவுண்டானா அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒனறிய தலைவர் ஆர்.தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். திருவிடைமருதூர் ஒன்றிய நிர்வாகி எஸ்.தர்மையன், குடந்தை ஒன்றிய நிர்வாகி ஆர்.நாகமுத்து, திருப்பனந்தாள் ஒன்றிய நிர்வாகி என்.நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சாமிக்கண்ணு, பக்கிரிசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே.செந்தில்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் கா.ஜீவபாரதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வறட்சி நிவாரணம்

ஆர்ப்பாட்டத்தில், வேலையின்றி பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி கூலியாக ரூ.400 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


மேலும் செய்திகள்