தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரி,
ரெயில் போக்குவரத்து
கன்னியாகுமரியில் பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூட திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி இருக்கிறார். 1956-க்கு முன்பு கன்னியாகுமரிக்கு ரெயில் போக்குவரத்து வசதி கிடையாது. காமராஜர் எம்.பி.யாக இருந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரிக்கு ரெயில் போக்குவரத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகு தான் ரெயில் போக்குவரத்து வந்தது. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நான்கு வழிச்சாலை பணி
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.3,400 கோடி செலவில் நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும். தற்போது கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் 3 மணி நேரம் ஆகிறது. நான்கு வழிச்சாலை பணி செயல்பாட்டுக்கு வந்தவுடன் 1½ மணி நேரத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று விடலாம். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
இந்தியா முழுவதும் 12 துறைமுகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் இருக்கின்றன. தற்போது குளச்சலில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
காசிக்கு ரெயில் விட கோரிக்கை
கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு ரெயில் விட வேண்டும் என்று நான் எம்.பி.யாக இருந்த காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போதும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மா, சில மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்துக்கு வந்து 2 நாட்கள் தங்கியிருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கன்னியாகுமரியை மட்டுமின்றி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான பேச்சிப்பாறை, திற்பரப்பு, மாத்தூர் தொட்டி பாலம், முட்டம் கடற்கரை போன்றவற்றை அழகுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அவர் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்குவேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.15 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் கன்னியாகுமரியை அழகுபடுத்துவதற்காக ரூ.12 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மணக்குடியை மேம்படுத்த ஏறக்குறைய 3 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டி
திறப்பு விழாவுக்கு பிறகு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு தற்போது தான் அறிக்கை கொடுத்துள்ளது. இதை முன்னாடியே கொடுத்திருந்தால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும்.
ஜல்லிக்கட்டு நடக்காததற்கு காங்கிரசும், தி.மு.க.வும் செய்த துரோகம் தான் காரணம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து நடத்த வேண்டும் என்பது தவறான தகவல், என்று தெரிவித்தார்.