புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் காளைகளுடன் வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
ஊர்வலம்-போராட்டம்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அரசு பொது வளாகத்தில் கூடிய அவர்கள், அங்கிருந்து புதிய பஸ் நிலையம், அரசு மகளிர் கலை கல்லூரி வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையாக உள்ள மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
இதையொட்டி புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு கட்டைகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிலர் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்து ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்வது போல் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஜல்லிக்கட்டு காளைகளுடன் வரக்கூடாது என்றனர். இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன.
கருப்பு துணி கட்டி போராட்டம்
இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை அருகே உள்ள மணப்பட்டியில் காளைகளின் கொம்புகளில் கருப்பு துணி கட்டி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.