ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடற்கரையில் மனிதச்சங்கிலி போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி புதுவை கடற்கரையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி,
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்ததன் பேரில் இளைஞர்கள் திரண்டனர்.
புதுவையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்காக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதனை ஏற்று ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் நேற்று காலை கடற்கரை காந்திதிடல் முன்பு திரண்டனர்.
மனிதச் சங்கிலி போராட்டம்
பின்னர் அவர்கள் கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கவர்னர் கிரண்பெடி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.