புதுவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து துறையின் பணிகளான தகுதி சான்றிதழ் கட்டணம், சேவை வரி, லைசென்சு புதுப்பித்தல் உள்பட அனைத்து கட்டணங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

Update: 2017-01-12 22:45 GMT
புதுச்சேரி,

இதனை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று காலை சாரம் அவ்வைத்திடல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ. டி.யூ. தொழிலாளர்கள் சங்க தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிவண்ணன், ராஜசேகர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்து இருந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்