கொலையில் சரண் அடைந்த 4 பேரிடம் காவலில் விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்த 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காரைக்கால் கோர்ட்டில் போலீசார் மனு செய்தனர்.
காரைக்கால்,
முன்னாள் அமைச்சர் கொலை
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினத்தை சேர்ந்தவர் வி.எம்.சி.சிவக்குமார் (வயது 65). இவர் புதுவை மாநில முன்னாள் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்து உள்ளார்.
காரைக்கால் மாவட்டம் நிரவி முதல் சாலையில் கட்டி வந்த தனது திருமண மண்டப கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்ற போது கடந்த 3-ந் தேதி கூலிப்படையினரால் வி.எம்.சி.சிவக் குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.
7 பேர் கொண்ட கும்பல்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் தொடர் புடைய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், பிரபல சாராய வியாபாரி ராமுவின் கொலை குற்றவாளி களுக்கு அவரது நண்பரான சிவக்குமார் உடந்தையாக இருந்ததால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
அதாவது, ராமுவின் 2-வது மனைவி எழிலரசி, கூலிப்படை வைத்து சிவக்குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
புதுச்சேரி கோர்ட்டில் சரண்
இந்தநிலையில் சிவக்குமார் கொலை தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபு, சூரியபிரகாஷ், கார்த்திக் மற்றும் சண்முகம் ஆகியோர் புதுச்சேரி கோர்ட்டில்சரணடைந்தனர்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காரைக்கால் டவுன் போலீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி வந்தனர். காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக் கப்பட்டு இருந்த நான்கு பேரையும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரைக்கால் அழைத்துச் சென்று காரைக் கால் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பிரபு முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 4 பேரும் காரைக் கால் கிளை சிறைச்சாலையில் அடைக் கப்பட்டனர்.
போலீஸ் காவலில் எடுக்க நடவடிக்கை
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக் குமார் கொலை தொடர்பாக புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தவர்களை காரைக் கால் இரண்டாம் வகுப்பு குற்ற வியல் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தி உள்ளோம்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரிக்கப்படும். கொலை சம்பவத்தில் 7 பேர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 4 பேர் திருச்சியையும், 2 பேர் விருதுநகரையும், ஒருவர் தஞ்சாவூரையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி கிடைத்ததும், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். இதில் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.