மோட்டார் சைக்கிளில் சென்ற போது மினி லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
மினி லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பொள்ளாச்சி
கல்லூரி மாணவர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 18), பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூரை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் கலைச்செல்வன் (18). இவர்கள் 2 பேரும் உடுமலை ரோடு திப்பம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிணி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கலைச் செல்வன், கார்த்திக் மற்றும் நண்பர்கள் வேட்டி கட்டி கல்லூரிக்கு வந்தனர். காலையில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழாவை முடித்து விட்டு, ஜமீன்முத்தூரில் உள்ள சக கல்லூரி மாணவர் அஜித் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.
மினி லாரி மோதியது
இதற்காக கலைச்செல்வன், கார்த்திக் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தும், அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படிக்கும் புளியம்பட்டியை சேர்ந்த சவுந்தரியன் (18) என்ற மாணவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கலைச் செல்வன் ஓட்டினார். பின்னால் சக மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு நல்லூர் அருகே சென்ற போது, ஆலப்புழாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மாணவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் சாவு
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கலைச்செல்வன், கார்த்திக், சவுந்தரியன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த கல்லூரி மாணவர்களின் உடலை பார்த்து சக மாணவ-மாணவிகள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதற்கிடையில் மினி லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை வேகமாக ஓட்டி வந்தார். அவரை பொள்ளாச்சி மேற்கு போலீசார் பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவு அருகே மடக்கி பிடித்தனர். விசாரணை யில் அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பாலமுருகன் (39) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து, பாலமுருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.