ஆழ்துளை கிணறு, பழுதான மோட்டார்களை கணக்கு எடுக்கும் பணி
ஆழ்துளை கிணறுகள் மற்றும் பழுதடைந்த மோட்டார்களை கணக்கு எடுக்கும் பணி
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை ஒன்றியம்சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, ஜல்லிபட்டி, அய்யம்பாளையம், குமாரபாளையம் உள் பட 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொது மக்களுக்கு 165 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், 75 தரைமட்ட தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒன்றிய பகுதியில் 130 கைப்பம்புகள், 62 சிறுவிசை பம்புகள், 219 மின்விசை பம்புகள் உள்ளன.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்ய வில்லை. இதனால் கைப்பம்பு, விசைபம்புகளில் இருந்து எடுத்து போதிய அளவு தண்ணீர் வினியோகம் செய்ய முடிய வில்லை. மேலும் அத்திக்கடவு குடிநீரும் குறைந்த அளவே வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அணைகளில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.
இதனால் பல ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
கணக்கெடுக்கும் பணிஎனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகங்க ளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அத்திக்கடவு குடிநீரை போதிய அளவு வழங்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் ஊர்கள், வறண்ட ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றை கணக்கெடுத்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் கூறியதாவது:–
குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டு உள்ளது. அதன்பேரில் சுல்தான்பேட்டை பகுதியில் வறண்ட ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து வருகிறோம். அதுபோல் பழுதடைந்த மின்மோட்டார்களும் கண்டறியப்பட்டு வருகிறது. இது தொடர்பான முழுவிவரமும் சேகரிக்கப்பட்ட உடன் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
பரிந்துரை செய்யப்படும்புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த உடன் தேவையான இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.