கரூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கரூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு சிறுவனும் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
பாட்டி- பேத்தி பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துலுக்காம்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மனைவி அமராவதி(வயது50). இவர்களுடைய மகள் தனலட்சுமி(31). இவர் திருமணமாகி உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி, உடுமலைப்பேட்டையில் இருந்து தனது மகன்கள் நந்தகுமார்(9), தர்னேஷ்குமார்(6), தனது அக்காள் மகள் நிகிலா(11) ஆகியோரை அழைத்துக்கொண்டு காரில் கரூர் வந்து
கொண்டிருந்தார்.
காரை தனலட்சுமி ஓட்டினார். வழியில் வேடசந்தூர் சென்று தனது தாய் அமராவதியையும் காரில் அழைத்து வந்தார். கரூர் அருகே உள்ள சுக்காலியூர் மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த அமராவதி, நிகிலா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிறுவன் சாவு
மேலும் படுகாயமடைந்த நந்தகுமார், தர்னேஷ்குமார் மற்றும் தனலட்சுமி ஆகியோர் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் நந்த குமார், தர்னேஷ்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் உடல் நிலை மிகவும் மோசமானதால், அந்த சிறுவனை கரூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நந்த குமார் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.