ஈரோடு தபால் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு தபால் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓய்வூதியர்கள் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மேலும் பணத்தட்டுபாடு ஏற்பட்டதால் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பணம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இந்தநிலையில் அரசு ஊழியர்களுக்கான டிசம்பர் மாதத்தி
ஈரோடு தபால் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓய்வூதியர்கள்
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மேலும் பணத்தட்டுபாடு ஏற்பட்டதால் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பணம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இந்தநிலையில் அரசு ஊழியர்களுக்கான டிசம்பர் மாதத்திற்கான ஊதியம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அவர்களுடைய வங்கி, தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியர்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஈரோடு தபால் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அப்போது, பணத்தட்டுபாடு உள்ளதால் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங் கப்படும் என்று தபால் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். ஓய்வூதியர்கள் தங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமாக வழங்க முடியாது என்று ஊழியர்கள் உறுதியாக கூறினார் கள்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த ஓய்வூதியர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி காலை 10.15 மணிஅளவில் ஈரோடு தபால் நிலையம் முன்பு உள்ள காந்திஜிரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வூதியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் கூறும்போது, “மத்திய அரசு ஊழியர்களாக இருந்த எங்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் நாங்கள் தபால் அலுவலகத்தில் பணம் எடுக்க வந்த போது ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. அப்போது பணத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் ஏற்றுக்கொண்டோம். ஆனால் இந்த மாதம் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்குவதாக கூறினார்கள். வயதானவர்களான நாங்கள் ஒருவர் துணையுடன் வந்து ஓய்வூதியம் வாங்குகிறோம் நடக்கவே முடியாமல் சிரமப்படும் பெரும்பாலானவர்கள் ரூ.200 வரை செலவு செய்து ஆட்டோவில் வந்து ஓய்வூதியம் வாங்க வேண்டி உள்ளது எனவே எங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.”, என்றனர்.
ரூ.5 ஆயிரம்
அதற்கு போலீசார், “தபால் அலுவலக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியல் போராட்டத்தை கைவிடுங்கள்.”, என்று கூறியதை தொடர்ந்து ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தபால் அலுவலக வளாகத்தில் திரண்டு நின்று அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஓய்வூதியர்களுடன் தபால் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓய்வூதியர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர்.
ஈரோடு காந்திஜி ரோட்டில் ஓய்வூதியர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.