கோவை மாவட்டத்தில் இதுவரை வங்கிகளில் செல்லாத நோட்டுகள் ரூ.13 ஆயிரத்து 242 கோடி டெபாசிட்

கோவை மாவட்டத்தில் வங்கிகளில் இதுவரை 500, 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் ரூ.13 ஆயிரத்து 242 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி இரவில் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக

Update: 2016-12-31 22:30 GMT
கோவை மாவட்டத்தில் வங்கிகளில் இதுவரை 500, 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் ரூ.13 ஆயிரத்து 242 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகள்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி இரவில் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களிடம் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும், மாற்றியும் வந்தனர். இதற்கான காலக்கெடு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் வங்கிகளில் செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்வது மிகவும் குறைவாக இருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இதுவரை எத்தனை கோடி செல்லாத ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.13 ஆயிரத்து 242 கோடி டெபாசிட்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் கடந்த நவம்பர் 10-ந் தேதியில் இருந்து தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 24-ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.9 ஆயிரத்து 400 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. காலக்கெடு முடிவடைந்த நிலையில் இதுவரை மொத்தம் ரூ.13 ஆயிரத்து 242 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பணத்தட்டுப்பாடு

மேலும் ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டு கள் மிக குறைவாகவே வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இருக்கும் பணத்தை வைத்து ஒவ்வொரு வங்கியும் சமாளித்து வருறோம். கூடுதலாக பணம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏ.டி.எம்.களில் பணம் வைப்பது தொடங்கி விட்டால் வங்கிகளில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்து விடும். தற்போது பணத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படாததால் வங்களில் கூட்டம் குறையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்