கடலில் குளித்த போது மாயமாக சிறுவனின் உடல் மீட்பு

கடலில் குளித்த போது மாயமான சிறுவனின் உடல் மீட்டகப்பட்டது. சுற்றுலா கர்நாடகா மாநிலம் மைசூர் காந்தி நகர் அன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின்லூயிஸ். இவர் அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் 18 பேருடன் கடந

Update: 2016-12-31 18:14 GMT

வேளாங்கண்ணி,

கடலில் குளித்த போது மாயமான சிறுவனின் உடல் மீட்டகப்பட்டது.

சுற்றுலா

கர்நாடகா மாநிலம் மைசூர் காந்தி நகர் அன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின்லூயிஸ். இவர் அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் 18 பேருடன் கடந்த 29–ந்தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றலா வந்துள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை ஆலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் கடலில் குளித்துள்ளனர். அப்போது மார்ட்டின்லூயிஸ் மகன் மார்ட்டின்ரிசோ (வயது14), உறவினர் வெங்கடேஷ் மகன் வினோத்குமார் (25) ஆகிய 2 பேரையும் திடீரென அலை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறிவினர்கள் சிறுவர்களை தேடினர். அப்போது மயங்கி நிலையில் இருந்த வினோத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரை உடனே நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர்கள் மார்ட்டின்ரிசோவை தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து அவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

அதைதொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் நேற்று முன்தினம் முழுவதும் சிறுவனை தேடி பார்த்தனர். இந்தநிலையில் நேற்று காலை வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கடற்கரை ஓரத்தில் ஒரு பிணம் ஒதுங்கி கிடப்பதாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தது மார்ட்டின்ரிசோ என்பது தெரியவந்தது. இதையடுத்து மார்ட்டின்ரிசோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்