ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவர்

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க. பிரமுகர் கொலை வானூர் தாலுகா குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன் (வயது 34). பா.ஜ.க. பிரமுகரான இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள

Update: 2016-12-31 17:54 GMT

விழுப்புரம்,

பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை

வானூர் தாலுகா குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன் (வயது 34). பா.ஜ.க. பிரமுகரான இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவருக்கும் குயிலாப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 4–ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக விழுப்புரம் கோர்ட்டில் ஜனா ஆஜராகி விட்டு மோட்டார் சைக்கிளில் குயிலாப்பாளையத்திற்கு புறப்பட்டார். விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் செல்லும்போது ராஜ்குமார் தரப்பினர், ஜனா மீது நாட்டு வெடிகுண்டு வீசி நிலைகுலைய செய்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராஜ்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த அஸ்வின் (28) என்பவர் உள்பட 12 பேரை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர்.

ரவுடி சிறையில் அடைப்பு

இந்த நிலையில் ஜனா கொலை வழக்கில் கைதான அஸ்வின், ஜாமீனில் வெளியே வந்தார். ரவுடியான அவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து, அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ரவுடி அஸ்வினை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் அஸ்வினை விழுப்புரம் நகர போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்