பர்கூர் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி

பர்கூர் அருகே குருவிநாயனப்பள்ளி காளி கோவில் பக்கமுள்ள துரைஏரியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 43). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அவர் மோட்டார் சைக்கிளில் குப்பம்– கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருவிநாயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ப

Update: 2016-12-31 22:30 GMT

பர்கூர்,

பர்கூர் அருகே குருவிநாயனப்பள்ளி காளி கோவில் பக்கமுள்ள துரைஏரியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 43). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அவர் மோட்டார் சைக்கிளில் குப்பம்– கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருவிநாயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் அங்கு சென்று காளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்