2017–2018–ம் ஆண்டிற்குரிய நபார்டு வங்கி சார்பில் ரூ.5 ஆயிரத்து 195 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கலெக்டர் கதிரவன் வெளியிட்டார்

2017–2018–ம் ஆண்டிற்குரிய நபார்டு வங்கி சார்பில் ரூ.5 ஆயிரத்து 195 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். வங்கியாளர்கள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் கதிரவன் த

Update: 2016-12-31 23:00 GMT

கிருஷ்ணகிரி,

2017–2018–ம் ஆண்டிற்குரிய நபார்டு வங்கி சார்பில் ரூ.5 ஆயிரத்து 195 கோடி மதிப்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கதிரவன் வெளியிட்டார்.

வங்கியாளர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 2017–2018–ம் ஆண்டுக்கு நபார்டு வங்கியின் சார்பில் ரூ.5 ஆயிரத்து 195 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:–

நபார்டு வங்கியின் சார்பில் வெளியிடப்பட்ட வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பீடு ரூ.5 ஆயிரத்து 195 கோடி ஆகும். அதில் கடந்த ஆண்டை விட 16 சதவீதம் கூடுதல் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ.2 ஆயிரத்து 231 கோடி மதிப்பில் 43 சதவீதமும், மத்திய மற்றும் நீண்ட கால விவசாய கடன் ரூ.817 கோடி மதிப்பில் 16 சதவீதமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு

கட்டுமான வசதிக்காக ரூ.124 கோடி மதிப்பில் 2.4 சதவீதமும், சார்பு தொழில்களுக்கு ரூ.191 கோடி மதிப்பில் 3.6 சதவீதமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.725 கோடி மதிப்பிலும், முன்னுரிமை கடன்களுக்கான கல்வி, வீட்டு வசதி, கூட்டு பொறுப்பு குழு ஆகியவற்றிற்காக 1057 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு துறைகள், அனைத்து வங்கிகளுடன் இணைந்து கலந்தாலோசிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையாகும்.

மேலும் மத்திய, மாநில அரசினுடைய கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் துறை சார்ந்த புதுவாழ்வு திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்குதல், தாட்கோ திட்டம், நீட்ஸ் தொழில் துறை திட்டங்கள், பயிர் காப்பீடு, உள்ளிட்ட பரிவர்த்தனைகளை உடனுக்குடன் பயனாளிகளுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் நரசிம்மன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ரவீந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் நஸ்ரீன் சலீம், இந்தியன் வங்கி மண்டல உதவி பொது மேலாளர் சாமிநாதன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர், வங்கி மேலாளர்கள் செல்வராஜ், ஜெயக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்