தர்மபுரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகரா
தர்மபுரி,
மத்திய அரசு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கட்ராமன், சுந்தரமூர்த்தி, மாவட்ட இணைசெயலாளர் தெய்வானை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பென்னாகரத்தில் மாவட்ட இணைசெயலாளர் ராஜி தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.