திருப்பத்தூரில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர் நெடுமறம் இளங்கோ தலைமை தாங்க
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர் நெடுமறம் இளங்கோ தலைமை தாங்கினார். பெரியய்யா முன்னிலை வகித்தார். முன்னதாக ஆறுமுகம் சேதுராமன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி மாநில செயலாளர் மாறன், வழக்கறிஞர் பிரிவு எழிலரசு, தேசிய ஒருகிணைப்பாளர் இமயம் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தேவாரம்பூர் ஆறுமுகம், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கல்பனா ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நெடுமறம் இளங்கோ கூறும்போது, தமிழனின் அடையாளமாகவும், பாரம்பரிய வீர விளையாட்டாகவும் கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரியம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்திருத்தினை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். முடிவில் யாசின் நன்றி கூறினார்.