கோவில் பூசாரிகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை சிவசேனா கண்டனம்

நாசிக் மாவட்டம் திரிம்பகேஷ்வர் கோவில் பூசாரிகள் வீட்டில் கணக்கில் வராத பணம் ஏராளமாக இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, திரிம்பகேஷ்வர் கோவில் பூசாரிகளின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு

Update: 2016-12-30 23:22 GMT

மும்பை

நாசிக் மாவட்டம் திரிம்பகேஷ்வர் கோவில் பூசாரிகள் வீட்டில் கணக்கில் வராத பணம் ஏராளமாக இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, திரிம்பகேஷ்வர் கோவில் பூசாரிகளின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி நேற்று அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், ‘‘கோவில் பூசாரிகள் பணம் வைத்திருந்தாலும், அது சட்டவிரோத வழியில் கிடைத்தது அல்ல. அசாதாரண கால சூழலில், கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்து கோவில்களை தவிர பிற மத வழிபாட்டு தலங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்றும் சிவசேனா கேள்வி எழுப்பியது.

மேலும் செய்திகள்