புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருவரங்குளம், புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில்

Update: 2016-12-30 23:00 GMT
திருவரங்குளம்,

புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது.

காலிகுடங்களுடன் சாலை மறியல்

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் கந்தர்வகோட்டை அருகே பெருங்களூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தான் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்