3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது
குண்டடத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கடந்த 21-ந்தேதி நள்ளிரவு உள்ள 2 பூச்சி மருந்து கடைகள் மற்றும் ஒரு அரிசி மண்டி ஆகியவற்றின் பூட்டை மர்ம ஆசாமி உடைத்து, அங்கிருந்து ப
குண்டடத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் கடந்த 21-ந்தேதி நள்ளிரவு உள்ள 2 பூச்சி மருந்து கடைகள் மற்றும் ஒரு அரிசி மண்டி ஆகியவற்றின் பூட்டை மர்ம ஆசாமி உடைத்து, அங்கிருந்து பணத்தை திருடி சென்றார். இது குறித்து கடையின் உரிமையாளர்கள் குண்டடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் திருடிய ஆசாமியை தேடி வந்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குண்டடம் அருகே திருப்பூர் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கைது
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை குண்டடம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் மதுரை பெத்தானியாபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குமார்(வயது 32) என்பதும், அவர் தனது மனைவி குழந்தைகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் வசிப்பதும் தெரியவந்தது. அவர் கடந்த 21-ந் தேதி குண்டடம் அரிசிமண்டி மற்றும் பூச்சி மருந்து கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டிவந்த மொபட் திருட்டு மொபட் என்றும் தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.49 ஆயிரத்தையும், அந்த மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
இவர் மீது கோவை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.