கூடலூர் - காஞ்சிமரத்துறை சாலையில் முல்லைப்பெரியாறு பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடலூர் அருகே காஞ்சி மரத்துறை சாலையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முல்லைப்பெரியாறு தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு, லோயர்கேம்ப் முதல் தேனி வைகை அணை வரை செ

Update: 2016-12-30 22:30 GMT
கூடலூர் அருகே காஞ்சி மரத்துறை சாலையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முல்லைப்பெரியாறு

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு, லோயர்கேம்ப் முதல் தேனி வைகை அணை வரை செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மக்களின் வசதிக்காக பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு, நாயக்கர்தொழு, பளியன்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு காஞ்சிமரத்துறை என்னுமிடத்திற்கு வந்து முல்லைப்பெரியாற்றை கடந்து செல்லவேண்டும்.

இந்த பகுதி மக்கள் ஊருக்கு செல்வதற்கு காஞ்சிமரத்துறையில் இருந்து முல்லைப்பெரியாற்றில் இறங்கி நடந்து சென்று வந்தனர். அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை கூடலூருக்கு கொண்டு வருவதில் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் போது கூடலூருக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தடுப்புச்சுவர் சேதம்

இதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர் - காஞ்சிமரத்துறை சாலையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர்- காஞ்சிமரத்துறை சாலையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாலத்தின் தடுப்புச்சுவர் தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது.
இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சேதம் அடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்