50 நாட்களாக செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை அணிவித்து போராட்டம்
திண்டுக்கல்லில், 50 நாட்களாக செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றினர். பின்னர் பணத்தை எடுப்பதற்காக வங்
திண்டுக்கல்லில், 50 நாட்களாக செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றினர். பின்னர் பணத்தை எடுப்பதற்காக வங்கி, ஏ.டி.எம். மையங்களில் குவிந்தனர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாததால் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனை கண்டித்து, நேற்று திண்டுக்கல் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் பழனி பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் முருகபவனம் வழியாக வந்து அங்குள்ள காளியம்மன் கோவில் எதிரே, சுமார் 50 நாட்களாக செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.
சங்கு ஊதி...
மேலும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சங்கு ஊதி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது, அனைத்து ஏ.டி.எம்.மிலும் பணத்தை நிரப்ப வேண்டும். சுங்கச்சாவடி மையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஸ்வைப் எந்திரம் மூலம் பணம் செலுத்துவதற்கு சேவை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பிச்சைமுத்து, செயலாளர் தனசாமி, பொருளாளர் பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.