திராவிடர் கழகம் சார்பில் புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை, புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் நலக் கூட்ட மைப்பு மற்றும் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்

Update: 2016-12-30 22:45 GMT
கோவை,

புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி கோவையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் நலக் கூட்ட மைப்பு மற்றும் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு ஆரம்பப்பள்ளி தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஆ.நடராசன் தலைமை தாங்கினார். மாநில தனியார் பள்ளி செயலாளர் வாலன்றீன் இளங்கோ, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம், மண்டல தலைவர் கருணாகரன், மண்டல செயலாளர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கை யை முற்றிலும் நிராகரிக்கிறோம். பெரும்பாலான பொதுமக்களின் கருத்தை அறிந்து கல்வி திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருப்பது உண்மைக்கு மாறானது. இந்த புதிய கல்வித்திட்டம் என்பது வெகுமக்களுக்கு விரோதமான, குலக்கல்வித்திட்ட அடிப்படையில் உருவானதாகும். எனவே புதிய கல்விக் கொள்கையை கைவிடவேண்டும்.
மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற அகில இந்திய நுழைவு தேர்வு நடத்தப்படுவதை கைவிட வேண்டும்.

விதிவிலக்கு

2007-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நுழைவு தேர்வு ரத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அகில இந்திய நுழைவு தேர்வு நடத்துவது சட்டவிரோதமாகும். நீட் என்கிற நுழைவு தேர்வு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது. அந்த தேர்வு தேவையில்லை என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய வகையில் மத்திய அரசை வலியுறுத்தி, ஆண்டாண்டு காலமாக தமிழ் நாட்டில் கட்டிக்காத்து வந்த, சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும்.

குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலி யுறுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் டெஸ்மா சிவக்குமார், ஆனந்தகுமார், மோகன்ராஜ், ஜெயபாலன், ராஜசேகரன், நிவாஸ், டெஸ்மா பாஸ்கரன், பிரபாகர் உள்பட ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்