பாரிமுனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது
ரிசர்வ் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகையிட முயற்சி மத்திய அரசு ரூ.500, ரூ.1,
ராயபுரம்,
ரிசர்வ் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகையிட முயற்சிமத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வங்கிகளில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் 50 நாட்களுக்கு மேலாகியும் பணத்தட்டுப்பாடு நீங்காததால் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர்.
இதற்காக நேற்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 200–க்கும் மேற்பட்டோர் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் திரண்டனர். அங்கிருந்து அனைவரும் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
சாலை மறியல்அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் திடீரென பாரிமுனை ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.