திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் திருட்டு
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் வசித்து வருபவர் அசன் மைதீன் (வயது 50). இவருடைய மனைவி முபீனா. இவர்களுடைய மகள் சபீரா (4). இவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் வசித்து வருபவர் அசன் மைதீன் (வயது 50). இவருடைய மனைவி முபீனா. இவர்களுடைய மகள் சபீரா (4). இவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.