இரும்பாலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரும்பாலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டிப்பதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வீரபாண்டி தொகுதி செயலாளர் திருமாமாரி தலைமை தாங்கினா

Update: 2016-12-30 23:00 GMT

சேலம்,

சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரும்பாலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டிப்பதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வீரபாண்டி தொகுதி செயலாளர் திருமாமாரி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் முகிலன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜூ, ரஞ்சித்வளவன், காளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு, சேலம் பாராளுமன்ற செயலாளர் இமயவரம்பன், சேலம் மண்டல செயலாளர் நாவரசன், பாராளுமன்ற துணைச்செயலாளர் தமிழமுதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இரும்பாலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் இரும்பாலை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுரேஷ்குமார், தேவராஜ், ஸ்டாலின், நாகராஜ் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்