சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: நெல்லை மாநகராட்சி 49–வது வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் ராஜினாமா
நெல்லை மாநகராட்சி பேட்டை 49–வது வார்டு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேட்டை எம்.ஜி.பி. 4–வது வடக்கு தெருவில் உள்ள வட்ட செயலாளர் அமீர் வீட்டின் முன்பு நேற்று காலை கூடினர்.
பேட்டை,
நெல்லை மாநகராட்சி பேட்டை 49–வது வார்டு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேட்டை எம்.ஜி.பி. 4–வது வடக்கு தெருவில் உள்ள வட்ட செயலாளர் அமீர் வீட்டின் முன்பு நேற்று காலை கூடினர். அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தனர்.
அவைத் தலைவர் தீவான் அப்துல் கபூர், இணை செயலாளர் ஜன்னத், துணை செயலாளர்கள் பரிதா, அப்துல் அமீது, பொருளாளர் டென்னிசன், பிரதிநிதிகள் சாஜிதாபேகம் பெல்டின், அப்துல்காதர், பெண்கள் உட்பட 60–க்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வட்ட செயலாளின் மனைவி ஆயிஷா பானு தொடர்ந்து 10 ஆண்டுகள் மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வந்தார். தற்சமயமும் கவுன்சிலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடத்த நிலையில், சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதால், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.