பேரையூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமை பெற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பேரையூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமை பெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணி முழுமை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரையூர்,

அகற்றம்
மதுரையை அடுத்துள்ள பேரையூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும் அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தொடர் புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதில் முக்குச்சாலை, ஜவகர் தெரு உள்பட சில பகுதிகளில் உள்ள பெரும் அளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும் எவ்வித பாகுபாடின்றி அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஆகியவை அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் காவல்துறையினர் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டன. ஆனால் அங்கு மீண்டும் ஒரு சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
மேலும் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை. இந்த பகுதிகள் பேரையூர் பேரூராட்சிக்கு உட்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற போது, குறிப்பிட்ட சில பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஏனோ அந்த பணிகள் நடைபெறவில்லை. இதனால் சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர்அதிருப்தியடைந்துள்ளனர்.
குறிப்பாக பேரையூர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழுமையடையாததால், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நடக்காததால், இங்குள்ள பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பேரையூர் பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.