மணல் கடத்தல்; ஒருவர் கைது

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் பட்டரைபெரும்புதூர்

Update: 2016-12-29 23:51 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் பட்டரைபெரும்புதூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை கைப்பற்றி அதை ஓட்டி வந்த பட்டரைபெரும்புதூரை சேர்ந்த வேலு (வயது 30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்