திருச்சியில் 9 சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்

திருச்சி, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 9 சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தர்ணா போராட்டம் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக புறநகர் பிரிவு பணிமனை முன் நேற்று மாலை

Update: 2016-12-29 22:39 GMT
திருச்சி,

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 9 சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தர்ணா போராட்டம்

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக புறநகர் பிரிவு பணிமனை முன் நேற்று மாலை தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப், டி.எம்.டி.எஸ், பி.டி.எஸ், எம்.எல்.எப், ஏ.எல்.எல்.எப். ஆகிய 9 தொழிற்சங்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. மண்டல தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

6 அம்ச கோரிக்கைகள்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடியை திரும்ப தரவேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கவேண்டும், கிரேடு ஊதிய வித்தியாசங்களை சரி செய்து 50 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கவேண்டும், 1-4-2003-க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி பழனிச்சாமி, ராஜாராம், மணி, ராஜமாணிக்கம், சுப்பிரமணியன், பாலன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்