பிராட்வேயில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி சாவு
ராயபுரம், 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். 4 வயது சிறுமி சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் அலிஅஸ்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு
ராயபுரம்,
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
4 வயது சிறுமி
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் அலிஅஸ்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாயிரா. இவர்களுக்கு 4 வயதில் கதீஜா என்ற மகள் இருந்தாள்.
நேற்று முன்தினம் சாயிரா, வீட்டில் தொழுகையில் ஈடுபட்டு இருந்தார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கதீஜா, திடீரென தங்கள் வீட்டின் பால்கனியில் உள்ள கம்பியில் ஏறி நின்று வெளியே எட்டி பார்த்தாள்.
தவறி விழுந்து சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கதீஜா, 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாள். இதில் அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறுமி கதீஜா, பரிதாபமாக உயிரிழந்தாள். இதுபற்றி எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.