புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்ட வங்கிகளுக்குரூ.24 கோடி வந்தது

புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.24 கோடி வந்துள்ளதாகவும், 6 ஆயிரம் வணிகர்கள் ‘ஸ்வைப்’ மிஷின் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் தெரிவித்தார். வங்கிகளில் பணம் தட்டுப்பாடு 500 மற்று

Update: 2016-12-29 22:15 GMT

வேலூர்,

புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.24 கோடி வந்துள்ளதாகவும், 6 ஆயிரம் வணிகர்கள் ‘ஸ்வைப்’ மிஷின் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.

வங்கிகளில் பணம் தட்டுப்பாடு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரு நபர் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம். ஏ.டி.எம். மையத்தில் ஒருநாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்குக்கூட பணமின்றி அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.24 ஆயிரம் வழங்குவதில்லை. அன்றைய தினம் இருக்கும் பணத்தின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படுகிறது. ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்காமல் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் நிரந்தரமாக மூடியே கிடக்கின்றன.

ரூ.24 கோடி வந்தது

திறந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் வைக்கப்படும் பணமும் சிறிது நேரத்திலேயே காலியாகி விடுகிறது. தற்போது ஆங்கில புத்தாண்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கான பணத்தை வங்கிகளில் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ரூபாய் நோட்டு பிரச்சினையால் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கிகளின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடந்தது. புத்தாண்டு நெருங்கியதால் பண பிரச்சினையை சமாளிக்க கூடுதல் பணம் அனுப்பி வைக்கும்படி வங்கிகள் சார்பில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில் வேலூர் மாவட்ட வங்கிகளுக்கு ரூ.24 கோடி பணம் வந்து சேர்ந்துள்ளது. இதில் புதிய 500 ரூபாய் நோட்டுகளும் அடங்கும். இந்த ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டு செலவுக்கு வங்கிகளில் போதிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் 6000 வணிகர்கள் ‘ஸ்வைப்’ கேட்டு விண்ணப்பித்துள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்