பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சசிகலா தேர்வு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தலைமை

Update: 2016-12-29 23:00 GMT

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சசிகலா தேர்வு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தலைமைப்பொறுப்புக்கு சசிகலா வர வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள். பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பலரும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

இதையடுத்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக அ.தி.மு.க.வினர் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமையில் மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் முன்னிலையில் மாலை அணிவித்தனர்.

பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் சுவாமிநாதன், மதியழகன், ராஜராஜன், பழனிவேல், சரவணன், வட்ட செயலாளர்கள் மனோகரன், நிர்வாகி தனபால் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இனிப்புகள் வழங்கினர்

இதே போல் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் தங்கப்பன் தலைமையில், முன்னாள் மாநகராட்சி கொறடா சுவாமிநாதன் முன்னிலையில் ரெயிலடியில் உள்ள எம்.ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரெங்கப்பா, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஞானதிருமுருகன், நிர்வாகிகள் சேகர், ரெங்கையன், தியாகராஜன், ராஜாராமன், துரை, முருகேசன், வட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்