ஓய்வுபெற்றவர்களுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி சேலத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்
சேலம்,
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கக்கோரி சேலத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. சிறப்பு தலைவரும், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் மணி வரவேற்றார். பொருளாளர் நடராசன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகி தியாகராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் முருகராஜ், பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மணிவண்ணன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஓய்வூதியம் வழங்க கோரிக்கைஇந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பணியாளர் விகிதத்தை உயர்த்தி வேலைப்பளு குறைக்க வேண்டும். போக்குவரத்துக்கழக தொழிலாளர் பணம் ரூ.5 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும். தொழில்நுட்ப ஊழியர் தனி ஊதியம் வழங்குவதுடன் இன்சென்டிவ், ஓட்டுநர், நடத்துனர் பேட்டா உயர்த்தப்பட வேண்டும். பொது பணி விதிகளை காரணம் காட்டி ஊழியர் நலனை பறிக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும். முந்தைய ஊதிய ஒப்பந்தங்களை முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.