பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு: கடலூரில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்ததும் நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னலில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியி

Update: 2016-12-29 22:30 GMT

கடலூர்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்ததும் நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னலில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் ராஜூ, முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் ஆர்.வி.மணி, தட்சிணா, அன்பு, தமிழ்ச்செல்வன், எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், நிர்வாகிகள் தேவநாதன், ஏழுமலை, பன்னீர், ராமையா, எத்திராஜ், சந்தானம், ராபின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்