பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 1,036 பேருக்கு ரூ.20 கோடியே 65 லட்சம் கடன் முதன்மை பொது மேலாளர் வழங்கினார்
திருவண்ணாமலை மண்டல பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கடன் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வங்கி பொது மேலாளர் இந்துசேகர் தாந்து தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் ராமசர்மா, முதன்மை மேலாளர் (ஊரகம்) கிருஷ்ணராஜ், துணை பொது மேலாளர்கள் குருபிரசாத், தண்டபாணி (விவசாயம்)
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மண்டல பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கடன் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வங்கி பொது மேலாளர் இந்துசேகர் தாந்து தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் ராமசர்மா, முதன்மை மேலாளர் (ஊரகம்) கிருஷ்ணராஜ், துணை பொது மேலாளர்கள் குருபிரசாத், தண்டபாணி (விவசாயம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை மேலாளர் (நிர்வாகம்) பெனிடிக்ட் வரவேற்றார்.
இதில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு டிராக்டர் கடன், பயிர் கடன், நீண்ட கால தவணை கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன், வாகன கடன் என 1,036 பேருக்கு ரூ.20 கோடியே 65 லட்சம் மதிப்பில் கடன்கள் வழங்கினார்.
முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் நடமாடும் விளம்பர வாகனத்தை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.