திருமணத்திற்காக ஒரு போராட்டம்

துருக்கியின் உஸும்லூ என்ற கிராமத்தில் உள்ள இளைஞர்கள், தினம் தினம் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2016-12-29 21:30 GMT
துருக்கியின் உஸும்லூ என்ற கிராமத்தில் உள்ள இளைஞர்கள், தினம் தினம் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதற்கு தெரியுமா? விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக! உஸும்லூ விவசாய கிராமம் என்பதால், ஆண்கள் சிறுவயதிலேயே விவசாயிகளாக மாறிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு, என நகர் புறங்களுக்கு சென்று அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள். படிக்கப் பிடிக்காமல் கிராமத்தில் இருக்கும் பெண்களும் சிறுவயதிலேயே திருமணம் முடித்துவிட, இளைஞர்களின் நிலை கேள்விக் குறியாகிவிட்டது.

உறவுகளுக்குள்ளும், ஊருக்குள்ளும் திருமணம் முடித்துக் கொள்ளும் பழக்கவழக்கம் துருக்கியில் நிலவி வருவதால், பக்கத்து ஊர் பெரியவர்களும் பெண் தர மறுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகி போன உஸும்லூ கிராம இளைஞர்கள், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 9 வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருப்பதால், இவர்களது கோரிக்கை மனு துருக்கி அதிபர் வரை பாய்ந்திருக்கிறது.

மேலும் செய்திகள்